உக்ரைனில் இருந்து மாணவர்களை மீட்டது போன்று மீனவ சகோதரர்களை மீட்க வெளியுறவுத்துறை நடவடிக்கை. புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி


உக்ரைனில் இருந்து மாணவர்களை மீட்டது போன்று மீனவ சகோதரர்களை மீட்க வெளியுறவுத்துறை நடவடிக்கை. புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
x
தினத்தந்தி 20 March 2022 6:11 PM IST (Updated: 20 March 2022 6:11 PM IST)
t-max-icont-min-icon

உக்ரைனில் இருந்து மாணவர்களை மீட்டது போன்று, மீனவ சகோதரர்களை மீட்கவும் வெளியுறவுத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

ஆற்காடு

உக்ரைனில் இருந்து மாணவர்களை மீட்டது போன்று, மீனவ சகோதரர்களை மீட்கவும் வெளியுறவுத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

தழிமிசை சவுந்தரராஜன் தரிசனம்

ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தரிசனம் செய்தார். முன்னதாக அவரை ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன், பாலமுருகனடிமை சுவாமிகள் மற்றும் கோவில் நிர்வாகிகள் வரவேற்றனர். 
சாமி தரிசனத்திற்கு பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

மீனவர்களை மீட்க நடவடிக்கை

அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். வெளியில் செல்லக் கூடியவர்கள் முக கவசம் அணிந்து கொண்டுதான் செல்ல வேண்டும். அதேபோல் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். முக்கியமாக சீனா போன்ற நாடுகளில் அதிகளவில் இன்னும் கொரோனா பரவி வருவதால் அனைவரும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். 

60 வயதுக்கு மேற்பட்டவர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். உலகத்திலேயே இல்லாத அளவிற்கு 12 வயதிலிருந்து 14 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தி வருகிறோம்.

தடுப்பூசி செலுத்துவது கடமை

வீட்டிலுள்ளவர்கள் அவர்களை அழைத்துச் சென்று தடுப்பூசி செலுத்த வேண்டியது கடமையாகும். மீனவர்கள் பிரச்சினை குறித்து, வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை தொடர்பு கொண்டால் உடனே எல்லாவித உதவிகளையும் செய்து கொண்டிருக்கிறார். 
எப்படி உக்ரைனில் இருந்து மாணவர்களை மீட்பதற்கு வெளியுறவுத் துறை முயற்சிகளை மேற்கொண்டதோ அதேபோல் மீனவ சகோதரர்களையும் மீட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். அதற்காக பாரத பிரதமர், வெளியுறவுத் துறை மந்திரிக்கு நாங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story