பென்னாத்தூரில் நடந்த எருது விடும் விழாவில் 354 காளைகள் பங்கேற்றன


பென்னாத்தூரில் நடந்த எருது விடும் விழாவில் 354 காளைகள் பங்கேற்றன
x
தினத்தந்தி 20 March 2022 6:11 PM IST (Updated: 20 March 2022 6:11 PM IST)
t-max-icont-min-icon

பென்னாத்தூரில் நடந்த எருது விடும் விழாவில் 354 காளைகள் பங்கேற்றன.

அடுக்கம்பாறை

வேலூரை அடுத்த அடுக்கம்பாறை அருகே உள்ள பென்னாத்தூர் கிராமத்தில் எருது விடும் விழா நடந்தது. வேலூர் தாசில்தார் செந்தில் தலைமை தாங்கினார். பேரூராட்சி உறுப்பினர்கள் கருணாகரன், சுபாஷினி லோகநாதன், முன்னாள் கவுன்சிலர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வருவாய் ஆய்வாளர் உலகநாதன் வரவேற்றார். அதிகாரிகள் உறுதிமொழி ஏற்றதை தொடர்ந்து காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டது. சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த 354 மாடுகள் பங்கேற்றன. மாடுகள் முட்டியதில் 5 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.

 வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் கவுன்சிலர்கள் அண்ணாத்துரை, ஜீவசத்யராஜ், கிராம நிர்வாக அலுவலர் லட்சுமிகாந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர் இளைஞர்கள் செய்திருந்தனர்.

Next Story