தவறி விழுந்த தொழிலாளி பலி


தவறி விழுந்த தொழிலாளி பலி
x
தினத்தந்தி 20 March 2022 6:53 PM IST (Updated: 20 March 2022 6:53 PM IST)
t-max-icont-min-icon

மரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலியானார்.

சாயல்குடி, 
சாயல்குடி அருகே வி.வி.ஆர். நகரை சேர்ந்தவர் சவேரியார் மாணிக்கம் (வயது55). இவர் அந்த பகுதியில் பனை ஏரி பதனீர் காய்ச்சும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். பனை மரத்தில் ஏறியபோது பனையில் இருந்து தவறி விழுந்ததில் சவேரியார் மாணிக்கம் படுகாயம் அடைந்தார். உடனே அவர் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சையில் இருந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகன் அந்தோணிராஜ் (27) கொடுத்த புகாரின் பேரில் சாயல்குடி இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Next Story