பழையகோட்டை மாட்டுத்தாவணியில் ரூ16 லட்சத்துக்கு மாடுகள் விற்பனை
பழையகோட்டை மாட்டுத்தாவணியில் ரூ16 லட்சத்துக்கு மாடுகள் விற்பனை
முத்தூர்:
பழையகோட்டை மாட்டுத்தாவணியில் ரூ.16 லட்சத்துக்கு மாடுகள் விற்பனை செய்யப்பட்டது.
பழையகோட்டை
நத்தக்காடையூர் அருகே உள்ள பழையகோட்டை மாட்டுத்தாவணியில் உலகிலேயே வீரத்திற்கும், கம்பீரத்திற்கும் புகழ் பெற்ற காங்கேயம் இன காளைகள், கன்றுகள், பசுமாடுகள் விற்பனை சந்தை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று வருகிறது.
அதன்படி நேற்று நடைபெற்ற சந்தையில் திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், கோவை, திருச்சி, திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த காங்கேயம் காளைகள் வளர்ப்போர், நாட்டு மாடுகளை வளர்க்கும் விவசாயிகள், காளை பராமரிப்பு விருத்தியாளர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து விற்பனைக்காக கொண்டு வந்த பூச்சி காளைகள், செவலை பசுமாடுகள், கிடாரிகள் விற்பனை செய்யப்பட்டது.
45 மாடுகள் விற்பனை
இந்த சந்தையில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட மொத்தம் 81 காங்கேயம் இன காளைகள், பசுமாடுகளில் மொத்தம் 45 மாடுகள் விற்பனை செய்யப்பட்டது. மொத்தம் ரூ.16 லட்சத்துக்கு காங்கேயம் இன காளைகள், கன்றுகள், மாடுகள் விற்பனை செய்யப்பட்டது. இந்த சந்தையில் திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த காங்கேயம் இன காளைகள், மாடுகள் வளர்க்கும் விவசாயிகள், வியாபாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story