பள்ளி மேலாண்மை குழுக்கூட்டம்


பள்ளி மேலாண்மை குழுக்கூட்டம்
x
தினத்தந்தி 20 March 2022 7:33 PM IST (Updated: 20 March 2022 7:33 PM IST)
t-max-icont-min-icon

பள்ளி மேலாண்மை குழுக்கூட்டம்

உடுமலை:
தமிழ்நாடுஅரசு பள்ளிக்கல்வித் துறையின் அறிவுறுத்தலின்படி உடுமலையை அடுத்துள்ள ராகல்பாவி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பள்ளித்தலைமையாசிரியர் சாவித்திரி தலைமை தாங்கினார். ராகல்பாவி ஊராட்சி மன்ற தலைவர் சுமதி செழியன், கல்வியாளர்கள் சின்னதுரை, கோபால், மற்றும் ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
கூட்டத்தில் வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர் கார்த்திகேயன், ஆசிரியர் கு.கண்ணபிரான் உள்ளிட்டோர் பேசினார். அதன் தொடர்ச்சியாக பள்ளி மேம்பாட்டு திட்டம் தயாரிக்கப்பட்டது. பள்ளிக்கு தேவையான கட்டமைப்பு வசதிகள் பற்றியும், அதற்கு எவ்வாறு நிதியினை பள்ளி மேலாண்மை குழு மூலம் திரட்டி பள்ளியின் வளர்ச்சிக்கு உதவுவது என்பது பற்றியும் பெற்றோருடன் கலந்தாலோசித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த பள்ளி மேலாண்மை குழு பெற்றோர், இளைஞர் நற்பணி மன்ற நண்பர்கள், முன்னாள் மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Next Story