பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை


பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 20 March 2022 8:03 PM IST (Updated: 20 March 2022 8:03 PM IST)
t-max-icont-min-icon

வேட்டவலத்தில் பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை

வேட்டவலம்
 
வேட்டவலம் பேரூராட்சிக்குட்பட்ட பிடாரன் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. 

இவரது மகன் தமிழரசன் (வயது 18). வேட்டவலம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தான். 

தமிழரசனுக்கு அடிக்கடி உடல்நல கோளாறு இருந்து வந்துள்ளது. இதற்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்தநிலையில் கடந்த 18-ந் தேதி தமிழரசனுக்கு மீண்டும் உடல்நல கோளாறு ஏற்பட்டுள்ளது.

இதில் வலிதாங்க முடியாமல் வீட்டில் தூக்குப்போட்டுக் கொண்டுள்ளார். 

இதை பார்த்த அவரது சகோதரி ராதா அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உதவியுடன் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். 

அங்கு சிகிச்சை பெற்று வந்த தமிழரசன் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இதுகுறித்து வேட்டவலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story