மாநில அளவிலான கயிறு இழுக்கும் போட்டி ஈரோடு அணி சாம்பியன்
மாநில அளவிலான கயிறு இழுக்கும் போட்டியில் ஈரோடு அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.
கூடலூர்
மாநில அளவிலான கயிறு இழுக்கும் போட்டியில் ஈரோடு அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.
கயிறு இழுக்கும் போட்டி
நீலகிரி மாவட்ட கயிறு இழுப்பு சங்கம், பீனிக்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் முதன் முறையாக கூடலூர் செயின்ட் தாமஸ் ஆங்கில பள்ளிக்கூட மைதானத்தில் மாநில அளவிலான கயிறு இழுக்கும் போட்டி கடந்த 19-ம் தேதி தொடங்கியது.
இதில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்து 60 அணிகள் கலந்து கொண்டது. 480 கிலோ பிரிவு 530 கிலோ, 560 மற்றும் 580 கிலோ பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது. 2-வது நாளாக போட்டிகள் நடந்தன.
இறுதி போட்டி
இதில் 480 பிரிவுக்கு விருதுநகர், நீலகிரி (கூடலூர்) அணியும், 530 பிரிவில் (இருபாலர்) கன்னியாகுமரி, விருதுநகர் அணியும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இதேபோல் 560 பிரிவில் வேலூர், விருதுநகர் அணியும், 580 பிரிவில் ஈரோடு, விருதுநகர் அணியும் மோதியது.
480 பிரிவில் விருதுநகர் அணி முதலிடத்தையும், நீலகிரி 2-வது இடத்தையும் பிடித்தது. 530 பிரிவில் கன்னியாகுமரி முதலிடத்தையும், விருதுநகர் இரண்டாவது இடத்தையும் பிடித்தது. தொடர்ந்து 560 பிரிவில் வேலூர் அணி முதல் இடத்தையும் விருதுநகர் 2-வது இடத்தையும் பிடித்தது.
ஈரோடு முதலிடம்
580 பிரிவில் ஈரோடு முதலிடத்தையும், விருதுநகர் 2-வது இடத்தையும் பிடித்தது. 2-வது இடங்களை விருதுநகர் அணி பெரும்பான்மையாக கைப்பற்றியது.
தொடர்ந்து சாம்பியன் பட்டம் பெற்ற அணிகளுக்கு மாவட்ட கயிறு இழுப்பு சங்க நிர்வாகிகள் கேடயமும், சான்றிதழும் வழங்கினர்.
நிகழ்ச்சியில் விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். தொடர்ந்து வெற்றி பெற்ற அணி வீரர்களை பாராட்டினர்.
Related Tags :
Next Story