கோலாப்பூர் வடக்கு தொகுதி இடைத்தேர்தல்- காங்கிரஸ், பா.ஜனதா வேட்பாளர்கள் அறிவிப்பு
கோலாப்பூர் வடக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு காங்கிரஸ், பா.ஜனதா வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மும்பை,
கோலாப்பூர் வடக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு காங்கிரஸ், பா.ஜனதா வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
காங்கிரஸ் வேட்பாளர்
கோலாப்பூர் வடக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. சந்திரகாந்த் ஜாதவ் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா பாதிப்புக்கு பிந்தைய உடல்நல பாதிப்பால் உயிரிழந்தார். இதையடுத்து அந்த தொகுதியில் அடுத்த மாதம் 12-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இந்தநிலையில் இந்த தொகுதியில் ேபாட்டியிட காங்கிரஸ் சார்பில் ஜெயஸ்ரீ ஜாதவ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் உயிரழந்த எம்.எல்.ஏ. சந்திரகாந்த் ஜாதவின் மனைவி ஆவார்.
பா.ஜனதா வேட்பாளர்
சந்திரகாந்த் ஜாதவ் கடந்த தேர்தலில் சிவசேனாவின் ராஜேஷ் ஷிர்சாகரை தோற்கடித்து இருந்தார். தற்போது சிவசேனா, காங்கிரஸ் ஒரே கூட்டணியில் இருப்பதால் சிவசேனா சார்பில் யாரும் போட்டியிடவில்லை. அதே நேரத்தில் பா.ஜனதா சார்பில் கோலாப்பூர் வடக்கு தொகுதி இடைத்தேர்தலில் சத்யஜித் கதம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் பா.ஜனதா மாநில துணை தலைவர் தனஞ்செய் மகாதிக்கின் உறவினர் ஆவார்.
கோலாப்பூர் வடக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு அடுத்த மாதம் 12-ந் தேதி தேர்தல் நடக்கிறது. வேட்புமனு தாக்கலை வாபஸ் வாங்க வரும் 28-ந் தேதி கடைசி நாள். வாக்கு எண்ணிக்கை அடுத்த மாதம் 16-ந் தேதி நடக்கிறது.
Related Tags :
Next Story