கஞ்சா விற்ற பெண் கைது


கஞ்சா விற்ற பெண் கைது
x
தினத்தந்தி 20 March 2022 9:26 PM IST (Updated: 20 March 2022 9:27 PM IST)
t-max-icont-min-icon

கம்பத்தில் கஞ்சா விற்ற பெண் கைது செய்யப்பட்டார்.

கம்பம்: 

கம்பம் வடக்கு சப்-இன்ஸ்பெக்டர் விஜய்ஆனந்த் மற்றும் போலீசார் காட்டுபள்ளிவாசல் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது கம்பம் உலகத்தேவர் தெருவைச் சேர்ந்த மாதேஸ்வரி (வயது 34) என்பவர் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story