தூக்கணாம்பாக்கம் பள்ளிப்பட்டு அய்யா வைகுண்டசாமி கோவிலில் சிறப்பு வழிபாடு
தூக்கணாம்பாக்கம் பள்ளிப்பட்டு அய்யா வைகுண்டசாமி கோவிலில் சிறப்பு வழிபாடு
கடலூர்
கடலூர் அருகே உள்ள தூக்கணாம்பாக்கம் பள்ளிப்பட்டில் உள்ள ஸ்ரீமன் நாராயணசாமி நிழல் தாங்கலில் அய்யா வைகுண்டசாமிக்கு வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு மற்றும் அன்னதானம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பங்குனிமாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
முன்னதாக காலை 6 மணிக்கு தீபம் ஏற்றி உகப்படிப்பும், பகல் 12 மணிக்கு உச்சிப்படிப்பும் அதைத் தொடர்ந்து அன்னதானமும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் மாலை 6 மணிக்கு தீபம் ஏற்றி உகப்படிப்பு நடைபெற்றது.
Related Tags :
Next Story