கரை ஒதுங்கிய இலங்கை படகு பறிமுதல்


கரை ஒதுங்கிய இலங்கை படகு பறிமுதல்
x
தினத்தந்தி 20 March 2022 10:08 PM IST (Updated: 20 March 2022 10:08 PM IST)
t-max-icont-min-icon

வேதாரண்யம் அருகே கரை ஒதுங்கி கிடந்த இலங்கை படகை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே கரை ஒதுங்கி கிடந்த இலங்கை படகை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இலங்கை படகு
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கோடியக்கரையில் உள்ள பழைய கலங்கரை விளக்கம் அருகே நேற்று இலங்கை நாட்டை சேர்ந்த பைபர் படகு ஒன்று கரை ஒதுங்கி கிடந்தது. 
இதை அந்த வழியாக சென்ற மீனவர்கள் பார்த்து வேதாரண்யம் கடலோர காவல் படை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து படகை கைப்பற்றி விசாரணை நடத்தினர். 
போலீசார் விசாரணை
இதுகுறித்து வேதாரண்யம் கடலோர காவல் படை போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த படகு என்ஜின் இல்லாத பழமை வாய்ந்ததால் காற்றின் வேகத்தில் கரை ஒதுங்கியதா? இந்த படகில் ஏதாவது கடத்தி வரப்பட்டதா?, இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் அகதிகள் படகில் தப்பி வந்தார்களா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வேதாரண்யம் அருகே இலங்கை படகு கரை ஒதுங்கி கிடந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story