ஆஸ்திரேலியாவுக்கு கடத்த முயன்ற ரூ.9¼ கோடி போதைப்பொருட்கள் சிக்கியது
ஆஸ்திரேலியாவுக்கு கடத்த முயன்ற ரூ.9¼ கோடி போதைப்பொருட்கள் சிக்கியது
பெங்களூரு:
பெங்களூரு விமான நிலையத்தில் உள்ள சரக்கு முனையத்திற்கு, தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் பார்சல் வந்திருப்பதாக சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்பேரில் சரக்கு முனையத்திற்கு சென்ற அதிகாரிகள் சென்னையில் இருந்து வந்த ஒரு பார்சலை பிரித்து பார்த்தனர். அந்த பார்சலில் சமையல் பாத்திரங்கள் இருந்தன. அந்த சமையல் பாத்திரங்களை தனித்தனியாக பிரித்து சோதனை செய்தபோது பாத்திரங்களுக்குள் தடை செய்யப்பட்ட எபிடிரைன் என்ற போதைப்பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து ரூ.9.20 கோடி மதிப்பிலான 46 கிலோ 800 கிராம் எடை கொண்ட போதைப்பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த பார்சல் சென்னையில் இருந்து வந்ததும், போதைப்பொருட்கள் ஆஸ்திரேலியாவின் மெல்போர்னுக்கு கடத்தப்பட இருந்ததும் தெரியவந்தது. அந்த பார்சலை அனுப்பியவரின் பெயர், விவரம் இல்லை. இருப்பினும் சென்னைக்கு சென்று போதைப்பொருளை பார்சலில் அனுப்ப நபரை கைது செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story