வள்ளிமலை அரசு பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தை புறக்கணித்து பெற்றோர் போராட்டம்
வள்ளிமலை அரசு பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தை புறக்கணித்து பெற்றோர் போராட்டம்
திருவலம்
தமிழகம் முழுவதும் ேநற்று பள்ளி மேலாண்மைக் குழு பெற்றோர் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. வேலூர் மாவட்டம் வள்ளிமலையில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் கூட்டம் நடக்க இருந்தது. ஆனால் கூட்டம் தொடங்கும் முன்பே பள்ளியில் கழிவறை, குடிநீர் உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லை, எனக் கூறி பெற்றோர் கூட்டத்தைப் புறக்கணித்து, பள்ளியை முற்றுகையிட்டனர்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு மேல்பாடி போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story