குடகனாற்றில் கட்டப்பட்ட தடுப்பு சுவரை உடனடியாக அகற்ற வேண்டும்
குடகனாற்றில் கட்டப்பட்ட தடுப்பு சுவரை உடனடியாக அகற்ற வேண்டும் என்று திண்டுக்கல்லை அடுத்த அனுமந்தராயன்கோட்டையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
திண்டுக்கல்:
குடகனாறு பாசன விவசாயிகள் ஆலோசனை கூட்டம் திண்டுக்கல்லை அடுத்த அனுமந்தராயன்கோட்டையில் நடந்தது. ஊர் முக்கியஸ்தர்கள் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், குடகனாறு விவகாரத்தில் வல்லுநர் குழு பரிந்துரையை ஏற்று குடகனாற்றில் கட்டப்பட்ட தடுப்பு சுவரை உடனடியாக அகற்ற வேண்டும்.
இது தொடர்பான போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது தொடரப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் விவசாயிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். மேலும் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட கலெக்டர் விசாகனிடம் நாளை(திங்கட்கிழமை) மனு கொடுக்கவும் விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.
Related Tags :
Next Story