பேரணாம்பட்டு அருகே 4,500 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு


பேரணாம்பட்டு அருகே 4,500 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
x
தினத்தந்தி 20 March 2022 10:23 PM IST (Updated: 20 March 2022 10:23 PM IST)
t-max-icont-min-icon

பேரணாம்பட்டு அருகே 4,500 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

பேரணாம்பட்டு

பேரணாம்பட்டு அருகே உள்ள சாத்கர் மலைப்பகுதியில் பேரணாம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜன் பாபு தலைமையில், சப்- இன்ஸ்பெக்டர் தேவபிரசாத் மற்றும் போலீசார் சாராய வேட்டை நடத்தினர். அப்போது 5 சாராய அடுப்புகள், ரூ.1 லட்சம் மதிப்புள்ள 2,500 லிட்டர் ஊறல் கைப்பற்றி அழித்தனர்.

தமிழக எல்லையான அரவட்லா மலையில் குடியாத்தம் மது விலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி தலைமையில் 5 போலீசார் சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது 2 சாராய அடுப்புகள் மற்றும் ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள 2 ஆயிரம் லிட்டர் ஊறல் கைப்பற்றி அழித்தனர். தப்பியோடி தலைமறைவான சாராய வியாபாரிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story