புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம்


புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம்
x
தினத்தந்தி 20 March 2022 10:31 PM IST (Updated: 20 March 2022 10:31 PM IST)
t-max-icont-min-icon

பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது.

அன்னவாசல்:
பள்ளி மேலாண்மை குழு கூட்டம்
கல்வித்துறையில் தமிழகம் முதலிடம் பெற வேண்டும் என்ற அடிப்படையில் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதனடிப்படையில் இலுப்பூர் கல்வி மாவட்டத்தில் உள்ள முக்கண்ணாமலைப்பட்டி, அரசுமேல்நிலைப்பள்ளி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, உருவம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, கிளிக்குடி அரசு உயர்நிலைப்பள்ளி, மேலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, இலுப்பூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அன்னவாசல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்பட இலுப்பூர் கல்வி மாவட்டத்தில் உள்ள 631 பள்ளிகளிலும் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் தலைமையில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடந்தது.
இனக்கமான சூழ்நிலை
கூட்டத்தில் பள்ளிகளின் வளர்ச்சிக்காகவும், மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காகவும் அப்பகுதியில் உள்ள கல்வியாளர்கள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர்களை கொண்டு பள்ளிகளில், பள்ளி மேலாண்மை   குழு அமைக்கப்பட வேண்டும். இதன்மூலம் பள்ளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கும், கற்றல், கற்பித்தல் திறனை மேம்படுத்துவதற்கும், மாணவ- மாணவிகளை நெறிப்படுத்துவதற்கும் இக்குழு தெரிவிக்கும் ஆலோசனைகளை அரசிற்கு தெரியப்படுத்தி, செயல்படுத்துவதற்கும் இது ஒரு வாய்ப்பாக அமையும். 
மேலும் கொரோனா பெருந்தொற்றுக் காலத்திற்கு பிறகு, தற்போது பள்ளிக்கு வருகைத் தரும் மாணவர்களிடையே உளவியல் ரீதியாக ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணவும் மற்றும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடையே இனக்கமான சூழலை ஏற்படுத்தி கல்வித் தரத்தை மேம்படுத்திட பள்ளி மேலாண்மைக் குழுவினர் ஆலோசனைகளை தெரிவிக்கலாம் என கூறப்பட்டது. இந்த ஆலோசனைகள் அனைத்தும் அரசிற்கு கருத்துருவாக அனுப்பப்பட்டு, செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் பெற்றோர்கள், ஊராட்சி பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மணமேல்குடி
மணமேல்குடி ஒன்றியம் வெள்ளூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் அதன் தலைவர் கற்பகம் தலைமையில் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் பால சுப்ரமணியன் குழுவின் நோக்கங்கள் மறுகட்டமைப்பு விவரங்கள் பற்றி தெளிவாக விளக்கி பேசினார். கூட்டத்தில் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் சீனிவாசன் நன்றி கூறினார்.
பொன்னமராவதி
பொன்னமராவதி ஒன்றியம், பொன்-புதுப்பட்டியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவிற்கு பள்ளியின் முதல்வர் தலைமை ஆசிரியர் நிர்மலா தலைமை தாங்கினார். 
இதேபோல் பொன்-புதுப்பட்டி நகரமடம் அரசு நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் பொன்னமராவதி ஒன்றியத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மை குழுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பெற்றோர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
வடகாடு
வடகாடு அருகேயுள்ள நெடுவாசல் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தை மாவட்ட கலெக்டர் கவிதாராமு குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். மேலும் இதில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாமி. சத்தியமூர்த்தி மற்றும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

Next Story