வேன் கவிழ்ந்து 15 பக்தர்கள் காயம்


வேன் கவிழ்ந்து 15 பக்தர்கள் காயம்
x
தினத்தந்தி 20 March 2022 10:35 PM IST (Updated: 20 March 2022 10:35 PM IST)
t-max-icont-min-icon

திண்டிவனம் அருகே வேன் கவிழ்ந்த விபத்தில் 15 பக்தர்கள் காயமடைந்தனர்.

திண்டிவனம், 

சென்னை மணலி அடுத்த மாத்தூரில் இருந்து 20 பேர், விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலுக்கு வேனில் புறப்பட்டனர். வேனை சின்னமாத்தூரை சேர்ந்த அருண்குமார் (வயது 36) என்பவர் ஓட்டினார்.
திண்டிவனம் அடுத்த மேல்பேரடிக்குப்பம் அருகே வந்தபோது  வேனின் பின்பக்க டயர் திடீரென வெடித்தது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், தறிகெட்டு ஓடி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. 

15 பேர் காயம்

இந்த விபத்தில் வேனில் வந்த ராமதாஸ் மனைவி ரமணம்மாள் (56), பக்தவச்சலம் மனைவி புஷ்பா (42), சுரேஷ் மனைவி லதா (46), ஆனந்தன் (41), சுரேஷ் (51), வெங்கடசாமி மனைவி முனியம்மாள் (63), அழகர்சாமி மனைவி விஜயலட்சுமி (43) உள்பட 15 பேர் காயமடைந்தனர். 
இது குறித்த தகவல் அறிந்ததும் ரோசனை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story