கிணத்துக்கடவு அருகே குடும்ப தகராறை தட்டிகேட்ட ரியல் எஸ்டேட் அதிபருக்கு கத்திக்குத்து


கிணத்துக்கடவு அருகே குடும்ப தகராறை தட்டிகேட்ட  ரியல் எஸ்டேட் அதிபருக்கு கத்திக்குத்து
x
தினத்தந்தி 20 March 2022 10:41 PM IST (Updated: 20 March 2022 10:41 PM IST)
t-max-icont-min-icon

கிணத்துக்கடவு அருகே குடும்ப தகராறை தட்டிகேட்ட ரியல் எஸ்டேட் அதிபரை கத்தியால் குத்தியதாக தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு அருகே குடும்ப தகராறை தட்டிகேட்ட ரியல் எஸ்டேட் அதிபரை கத்தியால் குத்தியதாக தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். 
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

ரியல் எஸ்டேட் அதிபர்

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அண்ணா நகரை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 57). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். ஈஸ்வரனின் அக்கா ஈஸ்வரி. இவர் கோவில்பாளையம் காளியண்ணன் புதூர் விநாயகர் கோவில் வீதியில் வசித்து வருகிறார். அங்கு ஈஸ்வரன் சென்றிருந்தார். ஈஸ்வரியின் மகள் சபரி நாயகிக்கும் உடுமலையை டி.எஸ்.வி.புரத்தை சேர்ந்த சக்தி கார்த்திகேயனுக்கும் திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. இவர்கள் சஞ்சனா (7) என்ற மகள் உள்ளார். சக்திகார்த்திகேயன் ஒரு தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். 

வாக்குவாதம்-கத்திக்குத்து

இந்தநிலையில் சக்தி கார்த்திகேயனுக்கும், சபரி நாயகிக்கும் இடையே கருத்து வேறுபாட்டால் 2 பேரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். சக்தி கார்த்திகேயன் தனது மகள் சஞ்சனாவை பார்க்க நேற்று வந்து உள்ளார். அப்போது அவருக்கும் மனைவிக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அந்த வீட்டிலிருந்த ஈஸ்வரன், இதனை தட்டிக்கேட்டு உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சக்தி கார்த்திகேயன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரின் வயிற்றுப்பகுதியில் குத்தியதாக தெரிகிறது. 

தொழிலாளி கைது

இதனால் அவர் படுகாயம் அடைந்தார். இதையடுத்து ஈஸ்வரன் கிணத்துக்கடவில் உள்ள தனியார் மருத்துமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து ஈஸ்வரன் கிணத்துக்கடவு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து ரியல் எஸ்டேட் அதிபரை கத்தியால் குத்திய சக்தி கார்த்திகேயனை கைது செய்தார்.

Next Story