வேங்கைபட்டியில் வடமாடு மஞ்சுவிரட்டு


வேங்கைபட்டியில் வடமாடு மஞ்சுவிரட்டு
x
தினத்தந்தி 20 March 2022 10:47 PM IST (Updated: 20 March 2022 10:47 PM IST)
t-max-icont-min-icon

வேங்கைபட்டியில் வடமாடு மஞ்சுவிரட்டு நடந்தது.

சிங்கம்புணரி, 
தமிழ்நாடு ஏறுதழுவுதல் நலச்சங்கம் சார்பில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி சிவகங்கை மாவட்டம் வேங்கை பட்டி பகுதியில் வடமாடு மஞ்சுவிரட்டு விழா நடைபெற்றது. தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் பூமிநாதன் தலைமை தாங்கினார். பேரூராட்சி தலைவர் அம்பலமுத்து, தெற்கு ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியன், அவைத் தலைவர் சிவக்குமார், பேரூராட்சி துணை தலைவர் இந்தியன் செந்தில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அருணகிரி, தி.மு.க. சுற்றுச்சூழல் மாநிலத் துணைத் தலைவர் ரஞ்சன் துரை, மருத்துவர் அருள்மணி நகராஜன் ஆகியோர் வடமாடு மஞ்சுவிரட்டு விழாவை தொடங்கி வைத்தனர். சிறப்பு அழைப்பாளராக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் மற்றும் முன்னாள் அமைச்சர் தென்னவன் ஆகியோர் கலந்துகொண்டு மஞ்சுவிரட்டு விழாவில் பங்கேற்ற மாடுகளுக்கும், வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகளை வழங்கினர். 18 மாடுகள் கலந்து கொண்ட போட்டியில் ஒவ்வொரு மாட்டிற்கும் ½ நேரம் ஒதுக்கப்பட்டு 9 பேர் கொண்ட குழுவினர் மாடுகளை அடக்கும் வீரர்களாக நிறுத்தப்பட்டனர். இதில்  சிங்கம்புணரி மற்றும் சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, மணப்பாறை, திருச்சி போன்ற பகுதியில் இருந்து மாடுகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் வரவழைக்கப்பட்டு களத்தில் காளையர்கள் காளைகளை அடக்கினர். ஒரு சில காளைகள் மட்டுமே பிடிபட்டன. நிகழ்ச்சியில் சூரக்குடி முன்னாள் ஊராட்சி தலைவர் ஆனந்த கிருஷ்ணன், ஒன்றிய பொருளாளர் பாஸ்கரன், நகர் பொருளாளர் கதிர்வேல், மாவட்ட கலை இலக்கிய பேரவை செல்வகுமார், தலைமை செயற்குழு உறுப்பினர் அஞ்சப்பர் ஜெயராமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். விழா ஒருங்கிணைப்பாளராக பாலகிருஷ்ணன் மற்றும் விழா கமிட்டி உறுப்பினர்கள் சிவபுரி மதுரை வீரன், சிவபுரி கணேசன் மற்றும் வேங்கை பட்டி கிராம மக்கள் மற்றும் வேதா குரூப்ஸ் ஆகியோர் செய்திருந்தனர். தமிழ்நாடு ஏறுதழுவுதல் நலச்சங்கத்தின் சார்பில் நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியை காண சிங்கம்புணரி வட்டார பகுதியில் இருந்தும் அருகில் உள்ள மாவட்ட பகுதியில் இருந்தும் ஏராளமான  பொதுமக்கள் வடமாடு மஞ்சுவிரட்டை கண்டு ரசித்தனர்.

Next Story