பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் கலெக்டர் ஆய்வு


பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 20 March 2022 10:51 PM IST (Updated: 20 March 2022 10:51 PM IST)
t-max-icont-min-icon

வானூர் அருகே பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் கலெக்டர் மோகன் ஆ்ய்வு மேற்கொண்டார்.

விழுப்புரம். 

வானூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பெரிய கொழுவாரி ஊராட்சியில்  பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் கழிவறை, மழைநீர் சேகரிப்பு, குடிநீர் குழாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் 100 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது.  இப்பணிகள் முழுமையாக முடியும் நிலையில் உள்ளது. இதையடுத்து இந்த சமத்துவபுரத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் திறந்து வைத்து பயனாளிகளிடம் வீடுகளை ஒப்படைக்க உள்ளார்.  இந்த நிலையில் சமத்துவபுரத்தில் நேற்று கலெக்டர் மோகன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் அங்கு நடைபெற்று வந்த சாலை, மின் இணைப்பு, குடிநீர் வசதி உள்ளிட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் கட்டிடம் நல்ல தரமாக கட்டப்பட்டுள்ளதா என்றும் பார்வையிட்டார். 
அப்போது அவர் அங்கிருந்த அதிகாரிகளிடம் பணிகளை இந்தமாத இறுதிக்குள் நல்ல தரமான முறையில் முடிக்க வேண்டும். இதில் எந்த தவறும் நடைபெறக் கூடாது என உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு ஸ்ரீநாதா, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, அபிஷேக் குப்தா, திட்ட இயக்குனர் சங்கர், மகளிர் திட்ட இயங்குனர் காஞ்சனா உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story