குடும்ப தகராறில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை


குடும்ப தகராறில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 20 March 2022 10:53 PM IST (Updated: 20 March 2022 10:53 PM IST)
t-max-icont-min-icon

குடும்ப தகராறில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஜோலார்பேட்டை

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி பகுதியை சேர்ந்த மகேந்திரனுக்கும், தங்கமணிக்கும் திருமணமாகி ஒரு பெண் பிறந்தது. அந்த பெண் குழந்தை மற்றும் கணவர் மகேந்திரனை உதறி விட்டு தங்கமணி நாட்டறம்பள்ளியை அடுத்த கொத்தூர்பாட்டை மாரியம்மன் கோவில் வட்டம் பகுதியைச் சேர்ந்த சிவநந்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். தங்கமணி, சிவநந்தியுடன் 10 ஆண்டுகளாக குடும்பம் நடத்தி வந்தார். ஆனால் அவர்களுக்கு குழந்தையில்லை.

 இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது.
இதனால் மனமுடைந்த தங்கமணி  வீட்டின் அறையில் தூக்குப்போட்டுக் கொண்டார். உடனே அவரை தூக்கில் இருந்து கீேழ இறக்கி திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி தங்கமணி பரிதாபமாக உயிரிழந்தார். 
இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story