கறம்பக்குடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


கறம்பக்குடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 20 March 2022 11:03 PM IST (Updated: 20 March 2022 11:03 PM IST)
t-max-icont-min-icon

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கறம்பக்குடி:
கறம்பக்குடி ஒன்றிய நகர விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வாணக்கன்காடு கிராமத்தில் பட்டியல் இன இளைஞரை தாக்கி வன்கொடுமை செய்தவர்களை கைது செய்யக்கோரி கறம்பக்குடி சீனிகடை முக்கத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தெற்கு ஒன்றிய செயலாளர் செல்வரெத்தினம் தலைமை தாங்கினார். வடக்கு ஒன்றிய செயலாளர் சக்திவேல் முன்னிலை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் சாதிய அடக்குமுறைக்கு எதிராகவும், குற்றவாளிகளை கைது செய்ய கோரியும் கோஷம் எழுப்பப்பட்டது. இதில் மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு மாவட்ட செயலாளர் ஆசைதம்பி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story