இளம்பெண்ணை கர்ப்பிணியாக்கி விட்டு திருமணத்துக்கு மறுத்த தொழிலாளி உள்பட 5 பேர் மீது வழக்கு


இளம்பெண்ணை கர்ப்பிணியாக்கி விட்டு திருமணத்துக்கு மறுத்த தொழிலாளி உள்பட 5 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 20 March 2022 11:03 PM IST (Updated: 20 March 2022 11:03 PM IST)
t-max-icont-min-icon

இளம்பெண்ணை கர்ப்பிணியாக்கி விட்டு திருமணத்துக்கு மறுத்த தொழிலாளி உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

கோவில்பட்டி:
கயத்தாறு அருகே தலையால் நடந்தான்குளத்தைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து. கூலி தொழிலாளியான இவர், இளம்பெண் ஒருவரை காதலித்ததாகவும், அவர்கள் நெருங்கி பழகியதில் இளம்பெண் கர்ப்பமடைந்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர் இசக்கிமுத்து காதலியிடம் கர்ப்பத்தை கலைக்குமாறு வற்புறுத்தியதாக தெரிகிறது.
தொடர்ந்து மீண்டும் அவர்கள் நெருங்கி பழகியதில் இசக்கிமுத்துவின் காதலி 2-வது முறையாக கருவுற்றார். இதையடுத்து காதலியிடம் கர்ப்பத்தை மீண்டும் கலைக்குமாறு இசக்கிமுத்து மற்றும் அவருடைய குடும்பத்தினர் வற்புறுத்தியதாகவும், இல்லையெனில் திருமணம் செய்து வைக்க மாட்டோம் என்று மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில், இசக்கிமுத்து மற்றும் அவருடைய குடும்பத்தினர் 4 பேர் மீது கோவில்பட்டி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே இசக்கிமுத்து மற்றும் அவருடைய குடும்பத்தினரை கைது செய்ய வலியுறுத்தி, பாதிக்கப்பட்ட இளம்பெண் தாயாருடன் கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய துணை போலீஸ் சூப்பிரண்டு உதயசூரியன், இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்ததின்பேரில், தாய்-மகள் திரும்பி சென்றனர்.
-----------


Next Story