தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 20 March 2022 11:04 PM IST (Updated: 20 March 2022 11:04 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டி

குடிநீர் குழாய் சீரமைக்கப்பட்டது
இடைக்கோடு பஞ்சாயத்துக்கு உட்பட்ட புத்தன்சந்தையில் இருந்து கண்ணுமாமூடு செல்லும் சாலையில் அம்பேட்டின்காளை பகுதி உள்ளது. இந்த பகுதியில் சாலையோரம் அமைந்துள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக சாலையில் பாய்ந்தது. இதுபற்றி தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குழாய் உடைப்பை சீரமைத்தனர். 

சேதமடைந்த ஓடை
தோவாளை தாலுகாவுக்கு உட்பட்ட பூதப்பாண்டி கீழரதவீதி பகுதியில் சாலையோரம் கழிவுநீர் ஓடை அமைந்துள்ளது. இந்த ஓடையின் கரை சேதமடைந்து காணப்படுகிறது. கரை உடைந்து ஓடையின் உள்ளே விழுந்து கிடப்பதால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால், தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, ஓடையின் சேதமடைந்த பகுதியை அகற்றி சீரமைத்து தண்ணீர் வடிந்தோட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                 -ஸ்ரீபரிஷித், அழகம்மன்கோவில் தெரு, 
பூதப்பாண்டி
சுகாதார சீர்கேடு
ஆரல்வாய்மொழி பேரூராட்சிக்கு உட்பட்ட காமராஜர்புதூரில் கழிவுநீர் ஓடை உள்ளது. இந்த ஓடையை முறையாக பராமரிக்காததால் வடிந்தோட வழியில்லாமல் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஓடையை தூர்வாரி கழிவுநீர் வடிந்தோட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                  -கலையன்பன், ஆரல்வாய்மொழி.
காட்சிப்பொருளான அடி பம்பு
நாகர்கோவில் கோர்ட்டு சாலையில் எஸ்.எல்.பி. அரசு பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் முன்பு நடைபாதையோரமாக ஒரு குடிநீர் அடி பம்பு அமைக்கப்பட்டுள்ளது. முன்பு இந்த குழாய் தண்ணீரை பள்ளி மாணவர்கள் மற்றும் பாதசாரிகள் பயன்படுத்தி வந்தனர். தற்போது, குழாய் பழுதடைந்து காணப்படுகிறது. எனவே, பாதசாரிகள் நலன் கருதி அடி பம்புவை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                         -கந்தசாமி, வடிவீஸ்வரம், நாகர்கோவில். 

Next Story