மருத்துவ பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யும் போது கொரோனா காலத்தில் பணிபுரிந்த ஒப்பந்த ஊழியர்களுக்கு முன்னுரிமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
தமிழகத்தில் மருத்துவ பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யும் போது கொரோனா காலத்தில் பணிபுரிந்த ஒப்பந்த ஊழியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
நாகர்கோவில்,
தமிழகத்தில் மருத்துவ பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யும் போது கொரோனா காலத்தில் பணிபுரிந்த ஒப்பந்த ஊழியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
அமைச்சர் பேட்டி
நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் நடந்த ஆய்வு கூட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துரையாடினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-
குமரி மாவட்டத்தில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வு நடத்தினேன். மேலும் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் மருத்துவ கட்டமைப்பு தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் பல்வேறு அரசு ஆஸ்பத்திரிகளை தரம் உயர்த்த வேண்டும் என்று மக்கள் பிரதிநிதிகள் கேட்டுள்ளனர். அது முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று அடுத்த நிதி ஆண்டில் ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்கப்படும்.
நாகர்கோவில் கோட்டார் ஆயுர்வேத மருத்துவக்கல்லூரியில் தற்போது 100 படுக்கை வசதிகள் உள்ளன. வரும் நிதியாண்டில் கூடுதலாக 100 படுக்கை வசதிகள் செய்யப்படும். இதே போல குமரி மாவட்டத்தில் தேவைப்படும் இடத்தில் புதிதாக ஒரு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் மாநகராட்சி பகுதியில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வரும் நிதியாண்டில் நடவடிக்கை எடுக்கப்படும். ஓரிரு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சேதம் அடைந்த கட்டிடங்களை சீரமைக்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும்.
புற்றுநோய் சிகிச்சை
குமரி மாவட்டத்தில் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்க ரூ.56 கோடியில் அதிநவீன வசதியுடன் கூடிய மையம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் புற்று நோய் வருவதற்கான காரணங்களை ஆய்வு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும். குமரி மாவட்டத்தில் தற்கொலை முயற்சியை குைறக்க ஆய்வு நடத்தி மனநல ஆலோசனை வழங்கப்படும். நாகர்கோவிலில் ரூ.10.50 கோடியில் புதிதாக ஒருங்கிணைந்த தாய்சேய் சிகிச்சை மையம் கட்டப்பட்டு உள்ளது. அதுவிரைவில் பயன்பாட்டுக்கு வரும். குமரி மாவட்டத்தில் மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திாியில் கூடுதல் டாக்டர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான கணக்கெடுப்பு நடக்கிறது.
மேலும் ஆஸ்பத்திரியில் திருட்டு சம்பவங்கள் நடப்பதாக கூறுகிறீர்கள். அதை தடுக்க கண்காணிப்பு கேமரா வைக்க கலெக்டர் மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும். மாற்று திறனாளிகளுக்கான குறைதீர்ப்பு கூட்டம் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
சித்த மருத்துவ பல்கலைக்கழகம்
தமிழகத்தில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. சென்னை மாதவரம் பகுதியில் 20 ஏக்கரில் இடம் பார்க்கப்பட்டு வருகிறது. அவ்வாறு அமையும் பட்சத்தில் குமரி மாவட்டத்துக்கு அதுதொடர்பான துணை அமைப்புகள் வரும்.
கொரோனா காலத்தில் ஒப்பந்த அடிப்படையில் தான் டாக்டர்கள், செவிலியர்கள் பணிக்கு எடுக்கப்பட்டனர். தற்போது ஒப்பந்த மருத்துவ பணியாளர்களுக்கு வருகிற 31-ந் தேதி வரை பணி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மக்களை தேடி மருத்துவ திட்டத்துக்கு 7,200 பேர் வேலைக்கு அமர்த்தப்பட வேண்டி இருந்தது. இந்த வேலைக்கு ெகாரோனா காலத்தில் பணியில் ஈடுபட்ட மருத்துவ பணியாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் 20 மதிப்பெண்கள் கொடுக்கப்பட்டது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான பணியாளர்கள் மீண்டும் பணியில் சேர்ந்துள்ளனர். வருங்காலத்தில் மருத்துவப்பணிக்கு ஆட்கள் ேதர்வு செய்யும் போது கொரோனா காலத்தில் பணியாற்றிய மருத்துவ பணியாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட உள்ளது. தமிழகத்தில் மருத்துவ பணிகளில் காலி பணியிடங்கள் இருந்தால் உடனே நிரப்பப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பிறகு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரி, குலசேகரம் அரசு ஆஸ்பத்திரி உள்ளிட்ட பல இடங்களில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.
Related Tags :
Next Story