ஓசஅள்ளி ஊராட்சியில் ரூ.1 லட்சத்தில் திட்டப்பணிகளுக்கான பூமிபூஜை கோவிந்தசாமி எம்எல்ஏ பங்கேற்பு
ஓசஅள்ளி ஊராட்சியில் ரூ 31 லட்சத்தில் திட்டப்பணிகளுக்கான பூமிபூஜையை கோவிந்தசாமி எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தர்மபுரி:
கடத்தூர் ஒன்றியம் ஓசஅள்ளி ஊராட்சியில் உள்ள புதுப்பட்டி, பெருமாள் கோவில்பட்டி ஆகிய 2 கிராமங்களில் மாவட்ட ஊராட்சி குழு நிதியில் இருந்து தலா ரூ.9 லட்சம் மதிப்பில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டப்பட உள்ளது. இதேபோன்று வேடியூர் பிரிவு சாலை முதல் போசிநாய்க்கன்பட்டி பிரிவு சாலை வரை ரூ.22 லட்சம் மதிப்பில் மண் சாலை அமைக்கப்பட உள்ளது. மொத்தம் ரூ.31 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட உள்ள இந்த பணிகளுக்கான பூமி பூஜையில் கோவிந்தசாமி எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் யசோதா மதிவாணன் ஆகியோர் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தனர்.
இதில் கடத்தூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் மதிவாணன், ஒன்றியக்குழு தலைவர் உதயா மோகனசுந்தரம், வட்டார வளர்ச்சி அலுவலர் ரேணுகா, ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகம், கூட்டுறவு சங்க தலைவர் செல்வராஜ், ஒன்றிய குழு உறுப்பினர் அசோகன், நகர செயலாளர் சந்தோஷ், நிர்வாகிகள் ரவி, சுரேஷ், கோபி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story