திமுக சார்பில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நல உதவி மேற்கு மாவட்ட பொறுப்பாளர் இன்பசேகரன் வழங்கினார்


திமுக சார்பில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நல உதவி மேற்கு மாவட்ட பொறுப்பாளர் இன்பசேகரன் வழங்கினார்
x
தினத்தந்தி 20 March 2022 11:18 PM IST (Updated: 20 March 2022 11:18 PM IST)
t-max-icont-min-icon

திமுக சார்பில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நல உதவியை மேற்கு மாவட்ட பொறுப்பாளர் இன்பசேகரன் வழங்கினார்

காரிமங்கலம்:
காரிமங்கலம் அருகே உள்ள முக்குளம் ஊராட்சிக்குட்பட்ட சாமியார் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர்கள் பாப்பாத்தி, முருகேசன் தொழிலாளர்கள். இவர்களின் குடிசைகளில் தீ விபத்து ஏற்பட்டு உணவு பொருட்கள், துணிமணிகள் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதமானது. இந்த நிலையில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தி.மு.க. சார்பில் உணவு பொருட்கள், வேட்டி, சேலை உள்ளிட்ட நல உதவிகளை மேற்கு மாவட்ட பொறுப்பாளர் இன்பசேகரன் வழங்கி ஆறுதல் கூறினார். மேலும் அரசு சார்பில் இலவச வீடு கட்ட உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் வக்கீல் கோபால், குமரவேல், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் சூடபட்டி சுப்பிரமணி,  பேரூராட்சி தலைவர் மனோகரன், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் அன்பழகன், தி.மு.க. நிர்வாகிகள் தனக்கோடி கண்ணன்பெருமாள், சேட்டு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story