ஜல்லிக்கட்டில் கலந்து கொண்ட காளை உள்பட 2 காளைகள் செத்தன கிராமமே சோகத்தில் மூழ்கியது


ஜல்லிக்கட்டில் கலந்து கொண்ட காளை உள்பட 2 காளைகள் செத்தன கிராமமே சோகத்தில் மூழ்கியது
x
தினத்தந்தி 20 March 2022 11:20 PM IST (Updated: 20 March 2022 11:20 PM IST)
t-max-icont-min-icon

ஜல்லிக்கட்டில் கலந்து கொண்ட காளை உள்பட 2 காளைகள் செத்தன.

அன்னவாசல்:
இலுப்பூர் அருகே பெரிகுரும்பபட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் சேனாகோவில் கிராமத்தை சேர்ந்த லெட்சுமணன் என்பவரின் செவலை காளை வெற்றி பெற்று தங்க நாணயம் மற்றும் கட்டில் உள்ளிட்ட பரிசு பொருட்களை பெற்றதாக கூறப்படுகிறது. மேலும் இந்த காளை இதுவரை நடைபெற்ற பல்வேறு ஜல்லிக்கட்டுகளில் கலந்துகொண்டு 100-க்கு மேற்பட்ட பரிசுகளை பெற்றுள்ளது. ஜல்லிக்கட்டில் அவிழ்க்கப்பட்ட காளை உரிமையாளரிடம் பிடி கொடுக்காமல் சென்றபோது, காளையின் கழுத்தில் கிடந்த கயிறு  மரத்தில் சிக்கியதில் கயறு இறுகி சம்பவ இடத்திலேயே காளை பரிதாபமாக செத்தது. இதையறிந்த பொதுமக்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு ஜல்லிக்கட்டு காளைக்கு அஞ்சலி செலுத்தினர். இந்த சம்பவத்தால் சேனாகோவில் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. இதேபோல் இலுப்பூர் அருகே நவம்பட்டி முத்து மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான ஜல்லிக்கட்டு காளை சில நாட்களாக சோர்ந்த நிலையில் காணப்பட்டது. இந்நிலையில் நேற்று திடீரென கோவில் காளை செத்தது. இதையறிந்த அப்பகுதி பொதுமக்கள் ஜல்லிக்கட்டு காளைக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

Next Story