குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும்


குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும்
x
தினத்தந்தி 20 March 2022 11:24 PM IST (Updated: 20 March 2022 11:24 PM IST)
t-max-icont-min-icon

கோடியக்கரை, கோடியக்காடு பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும் என வேதாரண்யம் ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

வேதாரண்யம்:
கோடியக்கரை, கோடியக்காடு பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும் என வேதாரண்யம் ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
ஒன்றியக்குழு கூட்டம்
வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் தலைவர் கமலா அன்பழகன் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் அறிவழகன், ஒன்றிய கூடுதல் ஆணையர் அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். அலுவலர் ரமேஷ் வரவு, செலவு அறிக்கை மற்றும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த தீர்மானங்களை வாசித்தார். பின்னர் கூட்டத்தில் உறுப்பினர்கள் இடையே நடந்த விவாதம் வருமாறு:-
 நடராஜன் (அ.தி.மு.க.):- ஒன்றிய பகுதிகளில் நடக்கும் சாலை பணிகளை என்ஜினீயர் பிரிவு அதிகாரிகள் பார்வையிடுவது இல்லை.
வைத்தியநாதன் (தி.மு.க.):- பல கூட்டங்களில் கோரிக்கை விடுத்து பேசியும் எந்த பயனும் இல்லை. எந்த கோரிக்கைகளும் நிறைவேற்றபடவில்லை.
அறிவழகன் (துணைத்தலைவர்):- கோடியக்கரை, கோடியக்காடு பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
குடிநீர் பிரச்சினை
அண்ணாதுறை (கூடுதல் ஆணையர்):- உறுப்பினர்களின் கோரிக்கைகள் வரும் நிதிகளின் படி உடன் சரி செய்யப்படும். புதிய அதிகாரிகள், அலுவலர்கள் குறித்து உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்படும். என்ஜினீயர்கள் பிரிவு இனிவரும் காலத்தில் இணக்கமாக நடந்து பணி செய்வார்கள். குடிநீர் பிரச்சினை குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கூறி சரிசெய்யப்படும்.
கமலா அன்பழகன் (தலைவர் கமலா அன்பழகன்) :- ஒன்றியத்தில் செய்யப்பட வேண்டிய பணிகள் குறித்து பட்டியல் அனுப்பினால் பாதிக்கு பாதி கூட அனுமதி இல்லை. அரசு நிதியும் பாதிதான் வருகிறது. ஒன்றியத்தில் உள்ள 36 பஞ்சாயத்துகளில் சாலைகள் அதிகம். மேம்பாட்டு பணிகள் செய்ய முடியவில்லை. அனைத்து உறுப்பினர்களும் ஒன்றாக சென்று கலெக்டர் மற்றும் அமைச்சர்களை சந்தித்து கூடுதல் நிதி பெறலாம். எங்களுக்கு எந்த கட்சி பாகுபாடும் இல்லை. இவ்வாறு விவாதம் நடந்தது. முன்னதாக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை வரவேற்றார். 
முடிவில் பக்கிரிசாமி நன்றி கூறினார்.

Next Story