பங்குனி படையல் விழா


பங்குனி படையல் விழா
x
தினத்தந்தி 20 March 2022 11:33 PM IST (Updated: 20 March 2022 11:33 PM IST)
t-max-icont-min-icon

சிங்கம்புணரியில் பங்குனி படையல் விழா நடந்தது.

சிங்கம்புணரி, 
 சிங்கம்புணரி ஒன்றியத்துக்குட்பட்ட பாரி ஆண்ட பறம்பு மலையில் அமைந்துள்ள பொய் சொல்லா மெய் அய்யனார் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி படையல் விழா நடந்தது. சன்னாசி சுவாமிக்கு 21 வகையான  சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. சாதத்தில் லிங்க வடிவம் பிடிக்கப்பட்டது. குன்றக்குடி மடத்தில் இருந்து வந்த சிவனடியார்கள் சிறப்பு பூஜை செய்தனர். அன்னத்திற்கும் சன்னாசி சுவாமிக்கும் சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது.முக்கிய நிகழ்வாக குன்றக்குடியில் இருந்து வந்த சிவனடியார்கள்  திருமணமான பெண், குழந்தை பேறு பெற்றவர்களுக்கு மங்கல்யா பாக்கியம், நோய் நொடி இன்றி வாழவும் பிடி சாதம் வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது  ஏற்பாடுகளை பிரான்மலை பாப்பாபட்டி குலாலர் வம்சவழி பங்காளிகள் மற்றும் பொய் சொல்லா மெய் அய்யனார் கோவில் பூஜகர்கள் செய்திருந்தனர்.

Next Story