நாகை முச்சந்தி காளியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.


நாகை முச்சந்தி காளியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.
x
தினத்தந்தி 20 March 2022 11:34 PM IST (Updated: 20 March 2022 11:34 PM IST)
t-max-icont-min-icon

முச்சந்தி காளியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

நாகப்பட்டினம்:
 நாகை வெளிப்பாளையம் முச்சந்தி காளியம்மன் கோவில் பங்குனி திருவிழா கடந்த 4-ந்தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து சந்தனகாப்பு அலங்காரம், பால்காவடி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு அன்னப்பாவாடை பூஜை, மாவிளக்கு உள்ளிட்ட வழிபாடுகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருவிளக்கு பூஜை நடந்தது. முன்னதாக முச்சந்தி காளியம்மன் ஊஞ்சல் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து மகாதீபாராதனை நடைபெற்றது. திருவிளக்கு பூஜையில் நாகையை சுற்றியுள்ள திரளான பெண்கள் கலந்து கொண்டு விளக்கு ஏற்றி வழிபட்டனர்.

Next Story