2 ஆண்டுகளுக்கு பிறகு திறப்பு கட்ரஜ் உயிரியல் பூங்காவுக்கு படையெடுத்த பொதுமக்கள்
2 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்ட கட்ரஜ் உயிரியல் பூங்காவுக்கு பொதுமக்கள் படையெடுத்து உள்ளனர்.
புனே,
2 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்ட கட்ரஜ் உயிரியல் பூங்காவுக்கு பொதுமக்கள் படையெடுத்து உள்ளனர்.
பொது மக்கள் படையெடுப்பு
புனேயில் உள்ள கட்ரஜ் பகுதியில் ராஜீவ் காந்தி உயிரியல் பூங்கா மற்றும் வனவிலங்கு ஆராய்ச்சி நிலையம் உள்ளது. இங்கு புலி, ராட்சத அணில் உள்ளிட்ட 440 வகையான விலங்குகள் உள்ளது.
சுமார் 130 ஏக்கர் பரப்பில் உள்ள இந்த பூங்கா விலங்குகள் பகுதி, பாம்பு பூங்கா, 42 ஏக்கர் ஏரி என 3 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே கட்ரஜ் உயிரியல் பூங்கா கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மூடப்பட்டு இருந்தது. இதில் நோய் பரவல் குறைந்ததை அடுத்து இன்று உயிரியல் பூங்கா திறக்கப்பட்டது.
2 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்டதால் முதல் நாளான இன்றே பொது மக்கள் பூங்காவுக்கு படையெடுத்தனர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நீண்ட வரிசையில் காத்து நின்று டிக்கெட் வாங்கி பூங்காவை பார்வையிட ஆர்வமாக சென்றனர். மேலும் அவர்கள் பூங்காவில் உள்ள விலங்குகளை பார்த்து ரசித்தனர்.
12,854 பேர்
ஒரே நாளில் 12 ஆயிரத்து 854 பேர் வருகை தந்தனர். இதன் மூலம் ரூ.4 லட்சத்து 47 ஆயிரத்து 690 வருவாய் கிடைத்து உள்ளது. இது கொரோனாவுக்கு முன்பு வார இறுதி நாட்களில் வரும் பார்வையாளர்கள் எண்ணிக்கைக்கு நிகரானது என பூங்கா இயக்குனர் ராஜ்குமார் ஜாதவ் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், "கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் ஆசிய சிங்கத்தை இங்கு கொண்டு வந்தோம். ஆனால் கொரோனா காரணமாக அதை பொதுமக்கள் பார்வைக்கு கொண்டு செல்ல முடியவில்லை. தற்போது அதை பொதுமக்கள் பார்க்க முடியும். இதுதவிர இந்திய ராட்சத அணில், காட்டு பூனை போன்ற விலங்குகளையும் புதிதாக கொண்டு வந்து உள்ளோம்." என்றார்.
Related Tags :
Next Story