மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி பலி


மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி பலி
x
தினத்தந்தி 20 March 2022 11:37 PM IST (Updated: 20 March 2022 11:37 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி பலியானார்.

விழுப்புரம், 

விக்கிரவாண்டி அருகே ஆசாரங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சோமசுந்தரம். ஓய்வுபெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர். இவரது மனைவி மண்ணாங்கட்டி (வயது 70). சம்பவத்தன்று மண்ணாங்கட்டிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக தனது மருமகன் பக்தவத்சலத்துடன் மோட்டார் சைக்கிளில் விழுப்புரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றார். பின்னர் அங்கு சிகிச்சை முடிந்ததும் அவர்கள் வீட்டுக்கு புறப்பட்டனர். மரகதபுரம் ரோடு கண்டம்பாக்கம் காலனி அருகே சென்றபோது, மண்ணாங்கட்டி  எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து  தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவர் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், மண்ணாங்கட்டி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த  புகாரின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Related Tags :
Next Story