உற்பத்தி அதிகரிப்பால் வெல்லம் விலை வீழ்ச்சி-சிப்பம் ரூ.1,160க்கு விற்பனை


உற்பத்தி அதிகரிப்பால் வெல்லம் விலை வீழ்ச்சி-சிப்பம் ரூ.1,160க்கு விற்பனை
x
தினத்தந்தி 21 March 2022 12:24 AM IST (Updated: 21 March 2022 12:24 AM IST)
t-max-icont-min-icon

உற்பத்தி அதிகரிப்பால் வெல்லம் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. 30 கிலோ கொண்ட ஒரு சிப்பம் ரூ.1,160-க்கு விற்பனை செய்யப்பட்டது.

நொய்யல், 
கரும்பு வியாபாரிகள்
நொய்யல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான மரவாபாளையம், சேமங்கி, முத்தனூர், கோம்புபாளையம், தோட்டக்குறிச்சி, தளவாப்பாளையம், வேலாயுதம்பாளையம், புகழூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கரும்பு பயிரிட்டுள்ளனர்.
கரும்புகளை வெட்டி செல்வதற்காக புகழூரில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு விவசாயிகள் பதிவு செய்துள்ளனர். கரும்பை பதிவு செய்யாத விவசாயிகள் நொய்யல் சுற்று வட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் வெல்லம் தயாரிக்கும் ஆலைகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
உருண்டை வெல்லம்
இந்த கரும்புகளை சாறுபிழிந்து பாகு ஆக்கி உருண்டை வெல்லம், அச்சு வெல்லம், நாட்டுச் சர்க்கரை என தயார் செய்கின்றனர். அதன்பின்னர் வெல்லங்களை 30 கிலோ கொண்ட சிப்பங்களாக தயாரித்து உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், பிலிக்கல்பாளையத்தில் செயல்பட்டு வரும் வெல்லம் ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.
மேலும், தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும், கர்நாடகா, ஆந்திரா, கேரளா, மராட்டியம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் லாரிகள் மூலம் வியாபாரிகள் அனுப்பி வைக்கின்றனர்.
விலை வீழ்ச்சி
கடந்த வாரங்களில் உருண்டை வெல்லம் 30 கிலோ கொண்ட ஒரு சிப்பம் ரூ.1,260க்கும், அச்சு வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1,280-க்கும் விற்பனையானது. இந்த வாரம் ஒரு சிப்பம் உருண்டை வெல்லம் ரூ.1,160-க்கும், அச்சு வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1,170-க்கும் விற்பனையானது. வெல்லம் உற்பத்தி அதிகரிப்பின் காரணமாக வெல்லம் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
வெல்லம் மற்றும் கரும்பு விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

Next Story