இயற்கை முறையில் சாகுபடி செய்யப்பட்ட காய்கறிகளில் பூச்சி தாக்குதல்
இயற்கை முறையில் சாகுபடி செய்யப்பட்ட காய்கறிகளில் பூச்சி தாக்குதல் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
பொறையாறு:
இயற்கை முறையில் சாகுபடி செய்யப்பட்ட காய்கறிகளில் பூச்சி தாக்குதல் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
காய்கறி சாகுபடி
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா பகுதிகளில் விவசாய தொழிலும், இதற்கு அடுத்தபடியாக மீன்பிடி தொழிலும் உள்ளது. இந்த பகுதிகளில் விவசாயிகள் நெல், பருத்தி, உளுந்து, கரும்பு, வாழை, நிலக்கடலை, எள், சோளம், கம்பு, மரவள்ளி கிழங்கு, சர்க்கரை வள்ளிகிழங்கு, கேழ்வரகு, புடலங்காய், பீர்க்கங்காய், பாகற்காய் சுரைக்காய், மிளகாய், கத்திரிகாய் உள்ளிட்டவற்றை சாகுபடி செய்து வருகின்றனர்.
இயற்கை முறை
பொறையாறு அருகே சிங்கானோடை, பத்துக்கட்டு ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் இயற்கை முறையில் புடலங்காய், பீர்க்கங்காய், பாகற்காய், கத்தரிக்காய் ஆகிய காய்கறிகளை சாகுபடி செய்து உள்ளனர். இந்த காய்கறிகளில் நன்கு வளர்ந்து வந்த நிலையில் புழு பூச்சிகள் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:- ஆண்டுதோறும் நெல் சாகுப டிக்கு அடுத்த படியாக கத்தரிக்காய், வெண்டைக்காய், அவரைக்காய், பீர்க்கங்காய், புடலங்காய், மிளகாய், கொத்தவரை உள்ளிட்ட காய்கறி வகைகளை சாகுபடி செய்து வருகிறோம்.
பூச்சி தாக்குதல்
கார்த்திகை, ஆடி, சித்திரை ஆகிய 3 பட்டங்களாக பிரித்து நிலக்கடலையும் சாகுபடி செய்து வருகிறோம். கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பே வெயில் வாட்டி வதைப்பதால் பம்பு செட்டு மூலம் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சி வருகிறோம். வெயிலினால் செடிகள் வாடிவதங்கி விடுகிறது. தற்போது புடலங்காய், பீர்க்கங்காய், பாகற்காய் விளைச்சல் அமோகமாக உள்ளது. பனிப்பொழிவு காரணமாக புடலங்காய் மற்றும் பீர்க்கங்காய் பிஞ்சுகள் மற்றும் கொடிகளில் பூச்சிகள் தாக்குதல் அதிகமாக உள்ளது. இதனால் காய்கள் பெருக்கும் முன்பு அறுவடை செய்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story