பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம்
திருவாரூர் மாவட்டத்தில்
வலங்கைமான்:
திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் நடந்தது.
மேலாண்மைக்குழு கூட்டம்
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மேலாண்மைக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி தலைமை தாங்கினார். வலங்கைமான் பேரூராட்சி தலைவர் சர்மிளா சிவனேசன் முன்னிலை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளி ஆசிரியர்- ஆசிரியைகள், மாணவ-மாணவிகள், பெற்றோர்-ஆசிரியர் கழக நிர்வாகிகள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தமிழக அரசின் பல்வேறு கல்வி வளர்ச்சிக்கான திட்ட பணிகளை முறையாக செயல்படுத்துவதிலும், பள்ளியில் மாணவிகளின் கல்வி நலன் கருதி தமிழக அரசின் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தை நிறைவேற்றும் வகையில், அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அந்தவகையில் பெற்றோர்களின் ஆலோசனைகளையும், கருத்துக்களையும் பள்ளி வளர்ச்சி கருதி பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகக் கூட்டங்களின் மூலம் தெரிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
கொரடாச்சேரி
கொரடாச்சேரி ஒன்றியம், திருப்பள்ளிமுக்கூடல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்த மேலாண்மைக்குழு விழிப்புணர்வு கூட்டத்திற்கு பள்ளி மேலாண்மைக்குழு துணைத் தலைவர் லதா தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சரவணன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் ஊராட்சி வார்டு உறுப்பினர் மலர்கொடி மற்றும் திராவிடமணி உள்ளிட்ட பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு செய்யப்பட உள்ளது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அரசின் நலத்திட்ட உதவிகள் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படுவது குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில், அடுத்த மாதம் (ஏப்ரல்) நடைபெற உள்ள பள்ளி மேலாண்மைக்குழு மறு கட்டமைப்பில் அனைத்து பெற்றோர்களும் கலந்து கொண்டு நிர்வாகிகளை தேர்வு செய்வது. பள்ளியின் மேம்பாட்டிற்கு தேவையான நடவடிக்கைகளை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து மேற்கொள்வது. ஊரக பகுதிகளில் இடைநிற்றல் இல்லாமல் மாணவர்கள் கல்வி கற்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது. இதேபோல ஒன்றியத்தில் கீரங்குடி, பவித்திரமாணிக்கம், வண்டாம்பாளை, தேவர்கண்டநல்லூர், கமலாபுரம் உள்ளிட்ட ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளிலும், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளிலும் கூட்டம் நடந்தது.
குடவாசல்
குடவாசல் ஒன்றியத்தை சேர்ந்த குடவாசல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பெற்றோர்கள் கலந்து கொண்ட பள்ளி மேலாண்மைக்குழு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கலந்து கொண்டு வட்டார கல்வி அலுவலர் குமரேசன், மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க பெற்றோர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார். பல்வேறு விழிப்புணர்வு கருத்துக்களை எடுத்துக் கூறினார். ஏராளமான பெற்றோர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் மகேஷ்வரி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story