மதுவிற்ற 8 பேர் கைது


மதுவிற்ற 8 பேர் கைது
x
தினத்தந்தி 21 March 2022 12:30 AM IST (Updated: 21 March 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

நொய்யல், கடவூர் பகுதிகளில் மதுவிற்ற 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

நொய்யல்,
நொய்யல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பதாக பல்வேறு புகார் வந்தன. அதன்பேரில் வேலாயுதம்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அப்போது வேட்டமங்கலம் அருகே வடுகபட்டி பகுதியை சேர்ந்த சதீஷ் (வயது 32), குந்தாணிபாளையம் பகுதியை சேர்ந்த சுரேஷ் (34), திருக்காடுதுறையை சேர்ந்த விஜயலட்சுமி (50), புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் செங்காணம் பகுதியை சேர்ந்த மணி முத்து (27), ராமநாதபுரம் மாவட்டம் காளட்டான்குடி பகுதியை சேர்ந்த துரை (32), மேலூர் பகுதியை சேர்ந்த லிங்குசாமி (36), மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வள்ளுவர் நகரை சேர்ந்த ஸ்ரீராம் (32) ஆகியோர் சட்டவிரோதமாக மதுவிற்றது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் 7 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், விற்பனைக்காக வைத்திருந்த 42 மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல் கடவூர் தாலுகா பாலவிடுதி அருகே உள்ள சுக்காம்பட்டி பகுதியில் மதுவிற்ற மாரியம்மாள் (45) என்பவரை பாலவிடுதி போலீசார் கைது செய்தனர். மேலும், இவரிடம் இருந்து 7 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Next Story