மேட்டூர் பூங்காவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
மேட்டூர் பூங்காவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
மேட்டூர்:-
சுற்றுலா தலமான மேட்டூருக்கு விடுமுறை தினங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும். நேற்று விடுமுறை தினத்தையொட்டி மேட்டூர் அணை பூங்காவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். சிலர் பங்குனி உத்திரத்தையொட்டி அணைக்கட்டு முனியப்பன் கோவிலுக்கு சென்று பொங்கல் வைத்தும், ஆடு, கோழிகளை பலியிட்டும் நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் தாங்கள் தயார் செய்த உணவை அணை பூங்காவில் அமர்ந்து குடும்பத்துடன் உண்டு மகிழ்ந்தனர். சிறுவர், சிறுமிகள் விளையாட்டு சாதனங்களில் விளையாடி பொழுதை கழித்தனர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் மேட்டூரில் மீன் விற்பனை ஜோராக நடந்தது.
Related Tags :
Next Story