மின்கம்பியில் உரசியதால் லாரியில் இருந்த வைக்கோல் தீப்பிடித்தது
கெங்கவல்லி அருகே மின்கம்பியில் உரசியதால் லாரியில் இருந்த வைக்கோல் தீப்பிடித்து எரிந்தது.
கெங்கவல்லி:-
தம்மம்பட்டி குறும்பர் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவர் வெளியூர்களில் இருந்து வைக்கோல்களை வாங்கி அதனை லாரி மூலம் விற்பனை செய்து வருகிறார். நேற்று மதியம் கெங்கவல்லி அருகே வாழக்கோம்பை புலிகரடு பகுதியில் லாரி மூலம் வைக்கோலை விற்பனை செய்து கொண்டிருந்தார். அப்போது லாரியில் இருந்த வைக்கோல் போரில் மின்கம்பி உரசியது. இதனால் வைக்கோல் போரில் தீப்பிடித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சந்திரசேகர் கெங்கவல்லி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் நிலைய அதிகாரிகள் பெரியசாமி, வேலுமணி மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, தண்ணீரை பீய்ச்சி அடித்து வைக்கோல் போரில் பற்றிய தீயை அணைத்தனர்.
Related Tags :
Next Story