வடசென்னிமலை பாலசுப்பிரமணியசாமி கோவிலில் சத்தாபரணம்
வடசென்னிமலை பாலசுப்பிரமணியசாமி கோவிலில் சத்தாபரணம் நடந்தது.
தலைவாசல்:-
தலைவாசல் அருகே உள்ள வடசென்னிமலை பாலசுப்பிரமணிய சாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 18-ந் தேதி கோவில் தேரோட்டம் வெகுவிமரிசையாக நடந்தது. இந்தநிலையில் நேற்று சத்தாபரணம் நடந்தது. முன்னதாக மூலவர் பாலசுப்பிரமணியசாமிக்கு பால், பன்னீர், இளநீர், தேன், சந்தனம் மற்றும் பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சாமி மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் சாமி அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் கிரிவலம் சென்றார். விழாவையொட்டி கரகாட்ட நிகழ்ச்சி நடந்தது. தலைவாசல் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story