அரசு பள்ளிகளில் மேலாண்மை குழு கூட்டம்


அரசு பள்ளிகளில் மேலாண்மை குழு கூட்டம்
x
தினத்தந்தி 21 March 2022 12:44 AM IST (Updated: 21 March 2022 12:44 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மேலாண்மை குழு கூட்டம் நடந்தது.

நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மேலாண்மை குழு கூட்டம் நடந்தது.

மேலாண்மை குழு கூட்டம்
அரசு பள்ளிகளின் முன்னேற்றம் மற்றும் அதன் செயல்பாடுகளை மேலாண்மை செய்வதற்காக இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி பள்ளி மேலாண்மை குழு ஏற்படுத்தப்பட்டது.
அரசு வழிகளில் அடிப்படையில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறையின் கீழ் உள்ள அனைத்து அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் இந்த குழு முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் உள்ள ஆரம்ப, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை என மொத்தம் உள்ள 482 அரசு பள்ளிக்கூடங்களிலும் நேற்று மேலாண்மை குழு கூட்டம் நடந்தது. 
மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் அந்தந்த தலைமை ஆசிரியர்கள் தலைமையில் மாணவர்களின் பெற்றோர்களும், மேலாண்மை குழுவினரும் கலந்து கொண்டு பள்ளியின் வளர்ச்சி குறித்து பேசினார்கள்.

கல்லணை பள்ளி
நெல்லை டவுன் கல்லணை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம் நேற்று காலையில் நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி தலைமை தாங்கி, பள்ளியின் வளர்ச்சி குறித்து விளக்கி பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட உதவி திட்ட அலுவலர் சிவராஜ், மாநகராட்சி கவுன்சிலர்கள் உலகநாதன், அனார்கலி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரோலஸ்பாலன், தலைமை ஆசிரியர் நாச்சியார், உதவி தலைமை ஆசிரியர் மலர்விழி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பள்ளியின் செயல்பாடுகளை கண்காணிக்கவும், வளர்ச்சி திட்டங்களை கண்காணிக்கவும், அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பது பள்ளிகளில் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை திட்டமிடுதல் உள்ளிட்ட பணிகளை மேலாண்மை குழுவினர் மேற்கொள்ள வேண்டும் என்று முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி தெரிவித்தார்.
மேலப்பாளையம் கருங்குளத்தில் உள்ள மாநகராட்சி ஆரம்ப பள்ளியில் மாவட்ட கல்வி அலுவலர் வசந்தா தலைமையில் மேலாண்மை குழு கூட்டம் நடந்தது. இதில் கவுன்சிலர் ஆமினாபீவி, தலைமை ஆசிரியர் இசக்கிதாய் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story