ரூ.9 லட்சம் வாடகை செலுத்தாத 2 கடைகளுக்கு ‘சீல்’
திருவாரூர் நகரில் ரூ.9 லட்சம் வாடகை செலுத்தாத 2 கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
திருவாரூர்:
திருவாரூர் நகரில் ரூ.9 லட்சம் வாடகை செலுத்தாத 2 கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
2 கடைகளுக்கு ‘சீல்’
திருவாரூர் பழைய பஸ் நிலையம் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகம் அமைந்துள்ளது. இதில் 2 கடைகள் ரூ.9 லட்சம் வாடகை பாக்கி செலுத்ததாமல் நிலுவையில் இருந்து வந்தது. வாடகை பாக்கி குறித்து பலமுறை அறிவிப்பு செய்தும் செலுத்தாமல் இருந்து வந்துள்ளனர்.
இதனையடுத்து நகராட்சி ஆணையர் பிரபாகரன் உத்தரவின்படி நகராட்சி பொறியாளர் திருமலைவாசன், மேலாளர் முத்துக்குமரன், வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் பணியாளர்கள் 2 கடைகளை பூட்டி ‘சீல்’ வைத்தனர்.
முழு ஒத்துழைப்பு
இதுதொடர்பாக திருவாரூர் நகராட்சி ஆணையர் பிரபாகரன் கூறுகையில், வாடகை வரி உள்ளிட்ட நிலுவை தொகை செலுத்தாத வணிக நிறுவனங்கள், பொதுமக்கள் மற்றும் நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாக கடை உரிமைதாரர்கள் உடனடியாக நிலுவை தொகையை வருகிற 30-ந் தேதிக்குள் நகராட்சி அலுவலகத்தில் செலுத்தி சட்டபூர்வ நடவடிக்கைகளை தவிர்திட வேண்டும். மேலும் நகராட்சிக்கு முழு ஒத்துழைப்பு அளித்திட வேண்டும் என்றார்.
Related Tags :
Next Story