முனியப்ப சாமிக்கு சிறப்பு பூஜை


முனியப்ப சாமிக்கு சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 21 March 2022 12:46 AM IST (Updated: 21 March 2022 12:46 AM IST)
t-max-icont-min-icon

திருவிழாவையொட்டி முனியப்ப சாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

வேலாயுதம்பாளையம், 
மண்மங்கலத்தில் பிரசித்தி பெற்ற முனியப்பன் சாமி கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழாவையொட்டி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் தீர்த்த குடம் எடுத்து வந்தனர். பின்னர் சாமியை புனித நீரால் நீராடப்பட்டு, அலங்கார அபிஷேகம் நடந்தது. பின்னர் காலை 11 மணியளவில் ஆடு, கோழி ஆகியவை பலியிடப்பட்டன. மாலையில் முனியப்ப சாமிக்கு தேங்காய் உடைத்து பக்தர்கள் வழிபட்டனர்.

Next Story