ரூ.25 லட்சத்தில் செவிலியர் குடியிருப்பு கட்டும் பணி
கோமல் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில்ரூ.25 லட்சத்தில் செவிலியர் குடியிருப்பு கட்டும் பணியை நிவேதா முருகன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
குத்தாலம்:
குத்தாலம் அருகே கோமல் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் செவிலியர்களுக்கான குடியிருப்பு கட்டிடம் கட்டும் பணி தொடக்க விழா நடந்தது. விழாவுக்கு குத்தாலம் ஒன்றியக்குழு தலைவர் மகேந்திரன் தலைமை தாங்கினார். வட்டார மருத்துவ அலுவலர் கோபி முன்னிலை வகித்தார். டாக்டர் ராகப்பிரியா வரவேற்றார். இதில் நிவேதாமுருகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்து பணியை தொடங்கி வைத்தார். விழாவில் ஒன்றியக்குழு துணைத் தலைவர் முருகப்பா, கிராம நிர்வாக அதிகாரி பிரபாகரன், சுகாதார ஆய்வாளர் முருகன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வக்கீல் வினோத், திவ்யா சரண்ராஜ், ஊராட்சி மன்ற தலைவர் எழிலரசி பாலசுப்ரமணியன் உள்பட நிர்வாகிகள், டாக்டர்கள், செவிலியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story