கோவிலில் மூலவர் மீது விழுந்த சூரிய ஒளி
களக்காடு கோவிலில் மூலவர் மீது சூரிய ஒளி விழுந்தது.
களக்காடு:
தென் மாவட்டங்களில் உள்ள பிரசித்தி பெற்ற சிவன் கோவில்களில் ஒன்றான களக்காடு கோமதி அம்மன்- சத்தியவாகீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் உத்ராயாணம், தட்சாயாணம் காலங்களில் 6 மாதத்துக்கு ஒரு முறை சூரியன் ஒரு திசையில் இருந்து மற்றொரு திசைக்கு இடம் பெயரும்போது, சூரிய ஒளி கதிர்கள் மூலவர் மீது விழும் வகையில் கட்டப்பட்டு உள்ளது.
உத்ராயணமான நேற்று சூரியன் தென்திசையில் இருந்து வடதிசைக்கு இடம் பெயர்ந்தது.. இதனால் நேற்று காலையில் சூரிய உதயத்தின்போது சத்தியவாகீஸ்வரர் கோவில் மூலவர் மீது சூரிய ஒளி கதிர் விழுந்தது. காலை 6.35 மணிக்கு கோவில் கொடிமரத்தில் மீது விழுந்த சூரியனின் செந்நிற கதிர்கள் தொடர்ந்து மணிமண்டபம், சேரமான் பெருமான், மூலவர், நவநீத கிருஷ்ணர் சன்னதியில் விழுந்தது.
சூரிய ஒளி கதிர்கள் விழுந்த இடமெல்லாம் செந்நிறத்தில் ஜொலித்தது. சுமார் 3 நிமிடம் நீடித்த நிகழ்வை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசித்தனர். தொடர்ந்து இன்றும் (திங்கட்கிழமை), நாளையும் (செவ்வாய்க்கிழமை) கோவில் மூலவர் மீது சூரிய ஔி கதிர்கள் விழுவதை பக்தர்கள் தரிசிக்கலாம்.
Related Tags :
Next Story