கோவில் விழாவில் 2 பெண்களிடம் சங்கிலி பறிப்பு


கோவில் விழாவில் 2 பெண்களிடம் சங்கிலி பறிப்பு
x
தினத்தந்தி 21 March 2022 12:50 AM IST (Updated: 21 March 2022 12:50 AM IST)
t-max-icont-min-icon

வள்ளியூரில் கோவில் விழாவில் 2 பெண்களிடம் மர்மநபர்கள் சங்கிலி பறித்துச் சென்றனர்.

வள்ளியூர்:
வள்ளியூர் அருகே உள்ள ஆனைகுளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் பாலசிங் மனைவி சுந்தரகனி (வயது 58). இவர் நேற்று முன்தினம் சித்தூரில் நடந்த ேகாவில் தேரோட்ட விழாவில் சாமி கும்பிட சென்றிருந்தார். அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி சுந்தரகனி கழுத்தில் அணிந்திருந்த 2½ பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது.
இதேபோன்று தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்த சரஸ்வதி (50) என்ற பெண்ணிடம் இருந்தும் 2 பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர் பறித்து சென்றார். இதுகுறித்து வள்ளியூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story