பள்ளி மேலாண்மை குழு கூட்டம்


பள்ளி மேலாண்மை குழு கூட்டம்
x
தினத்தந்தி 21 March 2022 1:00 AM IST (Updated: 21 March 2022 1:00 AM IST)
t-max-icont-min-icon

தென்காசியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடந்தது.

தென்காசி:
பள்ளிக்கல்வித்துறை ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மை குழு சார்ந்த பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு கூட்டத்தை நேற்று நடத்த அறிவுறுத்தியது. அதன்பேரில் தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மை குழு சார்ந்த பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நேற்று காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை நடைபெற்றது. இதன் தொடக்க நிகழ்ச்சி தென்காசி 13-வது வார்டு நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் கோபால சுந்தரராஜ் தலைமை தாங்கி, பள்ளி மேலாண்மை குழுவின் முக்கியத்துவம் பெற்றோர்களின் கடமை மற்றும் பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆலோசனைகளை வழங்கினார். 
கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர், தென்காசி நகரசபை தலைவர் சாதிர், மாவட்ட கல்வி அலுவலர் சங்கீதா சின்னராணி, ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவி திட்ட அலுவலர் சிவமுத்து, வட்டார கல்வி அலுவலர்கள் தலைமை ஆசிரியர் மற்றும் பெற்றோர்கள், நகர்மன்ற கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story