508 பால்குடம் ஊர்வலம்
புளியங்குடியில் 508 பால்குடம் ஊர்வலம் நடந்தது.
வாசுதேவநல்லூர்:
புளியங்குடி அரசு மருத்துவமனைஅருகிலுள்ள முப்பெரும் தேவியர் பவானி அம்மன் ஆலயத்தில் உள்ள பெரியபாளையத்து பவானிஅம்மன், நாகக்கன்னியம்மன், நாகம்மனுக்கு 7-ம் ஆண்டு வருஷாபிஷேக விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு சாலை விநாயகர் கோவிலில் இருந்து சக்தியம்மா தலைமையில் விரதம் இருந்த பக்தர்கள் 508 பால்குடம், மற்றும் தமிழ்நாடு புண்ணியஸ் தல கோவிலில் இருந்து கொண்டு வரப்பட்ட 101 தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமும் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சுற்றி கோவிலை அடைந்தது. தொடர்ந்து 9.30 மணிக்கு கணபதி ஹோமம் மற்றும் பால், நீர், மஞ்சள், தயிர், சந்தனம், குங்குமம் உள்பட நறுமணப்பொருட்களால் முப்பெரும் தேவியர் பவானி அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது.
பின்னர் சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பெரிய தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். மதியம் அறுசுவை அன்னதானம் நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் குருநாதர் சக்திஅம்மா மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story