மாவட்டத்தில் புதிதாக 4 பேருக்கு கொரோனா


மாவட்டத்தில் புதிதாக 4 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 21 March 2022 1:28 AM IST (Updated: 21 March 2022 1:28 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் புதிதாக 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

சேலம்:-
சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்ததோடு, நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. கடந்த 2 நாட்களாக நோய் தொற்று யாருக்கும் ஏற்படவில்லை. இந்தநிலையில் நேற்று புதிதாக 4 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 360 ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம், நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 3 பேர் குணமடைந்துவிட்டதால் நேற்று அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். கொரோனாவுக்கு 7 பேர் மட்டுமே தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story