பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா


பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா
x
தினத்தந்தி 21 March 2022 1:29 AM IST (Updated: 21 March 2022 1:29 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 
பெரிய மாரியம்மன் 
ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும்  பங்குனி மாதம்  பூக்குழி திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு பூக்குழி திருவிழா வருகிற 31-ந் தேதி மதியம் 1 மணி அளவில் நடைபெற உள்ளது.
இதற்கான விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.  முன்னதாக கொடி பட்டம் கோவிலில் இருந்து நகரின் முக்கிய வீதி வழியாக வந்து மீண்டும் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் கொடியை பூசாரி சுந்தர் ஏற்றினார். தொடர்ந்து பெரிய மாரியம்மன் சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதையடுத்து சிறப்பு பூஜையும் நடைபெற்றது.
வீதி உலா 
விழாவையொட்டி தினமும் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 
விழாவிற்கான ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி கலாராணி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர். இந்த விழாவில் நகரசபை தலைவர் தங்கம் ரவி கண்ணன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story